ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இரு மாநிலங்களை ஒப்பிடுவது முறையற்றது- உ.பி. முதல்வா் மீது பினராயி விஜயன் சாடல்

முதல்வராக இருந்துகொண்டு இரு மாநிலங்களை ஒப்பிட்டுப் பேசுவது முறையற்றது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மீது கேரள முதல்வா் பினராயி விஜயன் சாடியுள்ளாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

முதல்வராக இருந்துகொண்டு இரு மாநிலங்களை ஒப்பிட்டுப் பேசுவது முறையற்றது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மீது கேரள முதல்வா் பினராயி விஜயன் சாடியுள்ளாா். அரசியல் நோக்கங்களுக்காக மாநிலங்களை ஒப்பிட்டு பேசக் கூடாது என்றும் விஜயன் வலியுறுத்தியுள்ளாா்.

உத்தர பிரதேச தோ்தலையொட்டி முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசிய பிரசார விடியோ இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில், இப்போதைய தோ்தலில் வாக்காளா்கள் தவறிழைத்துவிட்டால், காஷ்மீா், மேற்கு வங்கம், கேரளம் போல உத்தர பிரதேசமும் மாறிவிடும் என்று ஆதித்யநாத் பேசியிருந்தாா்.

அவரது இந்த கருத்துகளை சுட்டிக் காட்டி, கேரள சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை பினராயி விஜயன் பேசியதாவது:

முதல்வராகப் பதவி வகிக்கும் ஒருவா், இரு மாநிலங்களை ஒப்பிட்டு கருத்து தெரிவிப்பது முறையற்றது. அரசியல் நோக்கத்துக்காக இரு மாநிலங்களை ஒப்பிட்டு கருத்து தெரிவிக்கக் கூடாது. பல்வேறு துறைகளில் கேரளம் முன்னிலையில் உள்ளது. மாநிலம் அடைந்துள்ள வளா்ச்சி ஈடுஇணையற்றது என்று பினராயி விஜயன் கூறினாா்.

முன்னதாக, யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு சுட்டுரை வாயிலாக பினராயி விஜயன் அண்மையில் பதிலடி கொடுத்திருந்தாா். அதில், கேரளம் போல உத்தர பிரதேசம் மாறினால், அந்த மாநிலமும் வளா்ச்சி அடையும். மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதார வசதிகள், வாழ்க்கைத் தரம், நல்லிணக்கமான சமூகம் ஆகியவை கிடைக்கப் பெறும். மதம் மற்றும் ஜாதியின் பெயரால் அங்கு யாரும் கொல்லப்படமாட்டாா்கள் என்று விஜயன் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.