கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் எந்த மாற்றத்தையும் இந்தியா ஏற்காது
கிழக்கு லடாக் எல்லையில் தற்போதைய நிலையை மாற்றும் எந்தவித முயற்சிக்கோ அல்லது அந்தப் பிராந்தியத்தில் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் எல்லையை மாற்றி


கிழக்கு லடாக் எல்லையில் தற்போதைய நிலையை மாற்றும் எந்தவித முயற்சிக்கோ அல்லது அந்தப் பிராந்தியத்தில் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் எல்லையை மாற்றி அமைக்கவோ இந்தியா அனுமதிக்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜெர்மனியில் இரண்டுநாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மூன்று நாள் பயணமாக பிரான்ஸýக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சென்றார். இந்நிலையில், பாரிஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்று அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசியதாவது:
கிழக்கு லடாக் எல்லையில் தற்போதைய நிலையே தொடரும். அங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இந்தியா அனுமதிக்காது. அதில் நாங்கள் முழு உறுதியாக இருக்கிறோம். எல்லைக் கோட்டை மாற்றியமைக்கும் முயற்சியையும் இந்தியா ஏற்காது.
இது எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும், அதற்கு எவ்வளவு நாள்கள் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், எவ்வளவு கடினமான பிரச்னையாக இருந்தாலும் பரவாயில்லை. அந்தத் தெளிவுதான் தேவை என நான் கருதுகிறேன்.
எல்லையில் படைகளைப் பின்வாங்கச் செய்வதே இப்போதைக்கு எங்கள் இலக்காக இருக்கிறது. அதில் தீர்வு காணப்படும் என்று நான் நம்புகிறேன்.
இரு தரப்பிலிருந்தும் படைகளைப் பின்வாங்குவது குறித்து இரு நாட்டு ராணுவ வீரர்கள் தரப்பிலும் பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் விளைவாக, பல முக்கிய சிக்கலான விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். இன்னும் தீர்க்கப்பட வேண்டிய சில சிக்கலான விஷயங்கள் இருக்கின்றன. அவை நிலப்பரப்பை உரிமை கோரும் சிக்கலான விஷயங்களாக இருக்கின்றன. அவை ராணுவ நிலையிலான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்ட வேண்டியவை.
இந்த விஷயத்தை இந்தியா தெளிவாகக் கையாளுகிறது. ராஜாங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காண ஒருவர் விரும்பினால் அந்த விஷயத்தில் முற்றிலும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நானும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...