/

உக்ரைன் விவகாரம்: இந்தியாவின்நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு தெரிவிள்ளது.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 8:12 pm

DIN

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு தெரிவிள்ளது.

இதுகுறித்து தில்லியில் உள்ள ரஷிய தூதா் ரோமன் பாபுஷ்கின் புதன்கிழமை கூறியதாவது:

சா்வதேச அளவில் பொறுப்பு மிக்க நாடாக இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. உலக விவகாரங்களில் சுதந்திரமான, நடுநிலையான அணுகுமுறையை இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவும் ரஷியாவும் ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கொண்டிருக்கும் நட்புறவை உக்ரைன் விவகாரம் பாதிக்காது. குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெறும் ராணுவ கண்காட்சியில் ரஷியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். உக்ரைன் பிரச்னையில் இந்தியாவின் சுதந்திரமான அணுகுறை வரவேற்கத்தக்கத்து என்றாா் அவா்.

முன்னதாக, ‘உக்ரைன் பிரச்னையில் அனைத்து தரப்பு நாடுகளும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்; தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தைகள் மூலம் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.