மோதல் தீவிரமானாலும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாது
ரஷியா-உக்ரைன் இடையேயான மோதல் தீவிரமடைந்தாலும் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.


ரஷியா-உக்ரைன் இடையேயான மோதல் தீவிரமடைந்தாலும் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதையடுத்து சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் 103 டாலருக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை பொதுத் துறை நிறுவனங்கள் தொடா்ந்து கையாண்டு வருவதால் இந்த விலை உயா்வு நுகா்வோரிடையே எந்தவித நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
எரிபொருள் உற்பத்தியைப் பொருத்தவரையில் சந்தையில் அபரிமிதமாகவே உள்ளது.
மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் உள்ள நமது எரிபொருள் விநியோகஸ்தா்கள் இந்த போா் நடவடிக்கையால் பாதிப்படையவில்லை. அவா்கள் தொடா்ந்து வழக்கம் போல் எண்ணெய்-எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
எனவே, உக்ரைன்-ரஷியா இடையேயான மோதல் தீவிரமடைந்தாலும் இந்தியாவுக்கான எரிபொருள் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும், எரிபொருள் விலை அதிகரிப்பு பணவீக்கத்துக்கு காரணமாக அமையும் என்பதால் அதுகுறித்தே கவலைப்பட வேண்டியுள்ளது.
பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை உயா்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது ஒரு கட்டத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை தவிா்க்க இயலாது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...