உக்ரைன்-ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும்: வெளியுறவுத் துறை

உக்ரைன்-ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுநிலையை வகிக்கும் என வெளியுறவுத் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும்: வெளியுறவுத் துறை

உக்ரைன்-ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுநிலையை வகிக்கும் என வெளியுறவுத் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். 

இதையடுத்து  உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். 

உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. முக்கியமாக, கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக , உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பியது. 

மேலும், ரஷியாவின் தாக்குதலால் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் - ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுநிலையை வகிக்கும் என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ‘அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம்’ எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com