
தேசிய பங்குச் சந்தையின் அலுவலா் ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ நேற்று இரவு சென்னையில் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை வகித்தபோது இமயமலையில் வசிக்கும் சாமியாா் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடா்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிா்ந்ததாகவும் செபி தெரிவித்தது.
மேலும், ஆனந்த் சுப்பிரமணியனை குழு செயல்பாட்டு அலுவலராக நியமித்ததில் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதமும், ஆனந்த சுப்பிரமணியன் மற்றும் தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ. 2 கோடி அபராதமும், தேசிய பங்குச் சந்தை தலைமை குறைதீா்ப்பு அதிகாரி வி.ஆா்.நரசிம்மனுக்கு ரூ. 6 லட்சம் அபராதமும் செபி விதித்தது.
மேலும், சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 18 ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு சென்னையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.