தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உத்தரகண்ட்டைச் சேர்ந்த 188 பேர் உக்ரைனில் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட்டைச் சேர்ந்த 188 பேர் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக உத்தரகண்ட் காவல்துறை  தலைமை இயக்குனர் அசோக் குமார் சனிக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 11:57 am

DIN

உத்தரகண்ட்டைச் சேர்ந்த 188 பேர் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக உத்தரகண்ட் காவல்துறை  தலைமை இயக்குனர் அசோக் குமார் சனிக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கத் தேவையான ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் உத்தரகண்ட்டில் சுமார் 188 பேர் சிக்கித் தவிப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைப் பத்திரமாக மீட்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். 

உத்தரகண்ட்டின் பொது உதவி எண் "112" என்று அவர் கூறியுள்ளார். 

உக்ரைனில் சிக்சித் தவிக்கும் மக்களைப் பாதுகாப்பாக இந்தியா அழைத்துவர அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றது. மேலும், அதிக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.