தில்லியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: பெண் கைது
தேசிய தலைநகரில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்த 40 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


தேசிய தலைநகரில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்த 40 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹெராயின் கடத்திய வழக்கில் சிக்கிய பெண் ஓம்விஹார், உத்தம் நகரில் வசிக்கும் சுனிதா என்று தெரிய வந்தது.
அந்த பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 60.87 கிராம் உயர்தர ஹெராயின் மற்றும் ரூ.31.167 ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹெராயின் சப்ளை தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் உத்தம்நகர் அருகே காவல்துறையினர் சுனிதாவை கைது செய்ததாக காவல்துறை துணை ஆணையர் துவாரகா சர்கர் சௌத்ரி தெரிவித்தார்.
விசாரணையில், சாந்த்ரா என்ற மற்றொரு பெண்ணிடம் இருந்து ஹெராயின் வாங்கியதாக சுனிதா தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...