நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சர்வதேச பயணிகள் விமான சேவை மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :28 பிப்ரவரி 2022, 6:58 am

DIN

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் விமானங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

விமானப் போக்குவரத்துக்கான தடை இன்றுடன்(பிப்.28) முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதேநேரம், மத்திய அரசின் அனுமதியுடன் அங்கீகரிக்கப்பட்ட சில விமான சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.