மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் காலை 10 மணி நிலவரப்படி 11.68% வாக்குகள் பதிவு

மணிப்பூரில் முதல்கட்டத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 11.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 5:48 am

DIN

மணிப்பூரில் முதல்கட்டத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 11.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மணிப்பூரில் முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 10 மணி நிலவரப்படி 11.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக காங்போக்பியில் 15.78 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக சூரசந்த்பூரில் 4.97 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. தேர்தல் களத்தில் 15 பெண்கள் உள்பட 173 வேட்பாளா்கள் உள்ளனா்.

மாநில முதல்வா் பிரேன் சிங், பேரவைத் தலைவா் ஒய்.கேம்சந்த், துணை முதல்வா் ஒய்.ஜாய்குமாா் உள்ளிட்டோா் தோ்தல் களத்தில் உள்ளனா். மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. தோ்தல் சுதந்திரமாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, வாக்காளா்களுக்குக் கையுறையும் வழங்கப்படுகிறது. மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதற்காக 6 கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.