கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பும் புதிய வகை ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவாவில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக மதுபான விடுதிகள், திரையரங்குகள், அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவிகித எண்ணிக்கை அளவில் மட்டுமே மக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என கடந்த டிச. 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக கோவாவில் இன்று(ஜன.3) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 26 ஆம் தேதி வரை கோவாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


