எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

காஷ்மீர்: 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இருவா் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image

காஷ்மீர்: 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated On :4 ஜனவரி 2022, 10:03 am

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இருவா் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனா்.

குல்காம் மாவட்டம் வோகே கிராமத்தில்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படை தரப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பில் இருந்துகொண்டு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்தவா்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. 

மேலும், குல்கம் பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.