மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மின்சார வாரிய கட்டுப்பாட்டு மையத்தை 94987 94987 | 1912 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்கலாம்! எப்படி?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிரடி சலுகைகள் குறித்து...

News image

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் - படம் / நன்றி - ஐபோன்

Updated On :6 ஏப்ரல் 2026, 4:37 pm IST

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை சிறப்புச் சலுகையாக ரூ. 47 ஆயிரம் வரை தள்ளுபடி உடன் வாங்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டு நிறைவானதைக் கொண்டாடும் வகையில் ஐபோன்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்திய பயனர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

இதனால், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. புதிதாக எந்தவொரு தயாரிப்பு அறிமுகமானாலும் இந்திய சந்தையில் பயனர்கள் அதனை வாங்குவதற்கு வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில், பயனர்களைக் கவரும் வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான இமேஜின் ஸ்டோர் (Imagine Store), ஐபோன்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, அதிகபட்சமாக ரூ. 47,000 வரை தள்ளுபடி பெற முடியும். அதை எவ்வாறு பெறுவது என்பதைக் காணலாம்.

256GB நினைவகம் உடைய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அறிமுக விலை ரூ. 1,49,900. இதன் விலை ரூ. 47,000 குறைக்கப்பட்டு, தற்போது 1,02,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி குறிப்பிட்ட வங்கிக் கடன் அட்டைகளுக்கு ரூ. 4,000 வரை தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகளும் உண்டு.

மேலும், பழைய ஸ்மார்ட்போனை கொடுத்துவிட்டு (எக்ஸ்சேஞ்ச்) புதிய ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்கினால் கூடுதலாக ரூ. 6,000 வரை தள்ளுபடி பெற முடியும். தகுதியான மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 36,000 வரை தள்ளுபடி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகைகளை எல்லாம் பெற்றால் ரூ. 89,900-க்கு ஐபோன் 17 ப்ரோ மேக்ஸை பயனர்களால் வாங்க முடியும். இதேபோன்று, ரூ. 82,900 விலை கொண்ட ஐபோன் 17 ஸ்மார்ட்போனை சலுகை மூலம் ரூ. 37,900-க்கு பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Apple iphone 17 pro max iphone 17 discount offers in imagine store

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.