பெங்களூருவில் கரோனா 3-வது அலை: சுகாதாரத் துறை அமைச்சர்

பெங்களூருவில் கரோனா மூன்றாவது அலை உருவாகி வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். 
பெங்களூருவில் கரோனா 3-வது அலை: சுகாதாரத் துறை அமைச்சர்
பெங்களூருவில் கரோனா 3-வது அலை: சுகாதாரத் துறை அமைச்சர்

பெங்களூருவில் கரோனா மூன்றாவது அலை உருவாகி வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் அதிகரித்து வருவது மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். 

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று புதியவகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,892 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர், பெங்களூருவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். 

கர்நாடக மாநிலம் முழுக்க கரோனா பரவ பெங்களூரு மையமாக அமையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது அலை கரோனாவின்போதும் தொற்று பரவலின் மையமாக பெங்களூரு நகரம் இருந்தது என்று கூறினார்.

கரோனா பரவலுக்கான காரணம் குறித்து விளக்கிய அவர், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பயணிகள் திரும்புவதால், தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 0.4 சதவிகிதத்திலிருந்து தற்போது 1.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதில் 90 சதவிகிதத்தினர் பெங்களூருவில் இருப்பவர்கள். 

கடந்த ஆறு மாதங்களாக 0.1 சதவிகிதத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. தற்போது 1.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பொதுமுடக்கம் போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். தற்போதுதான் பொதுமக்களின் வாழ்க்கை இயல்புநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் குறித்து விவாதிப்பது மேலும் அவர்களை பாதிக்கும். 

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com