பெங்களூருவுக்கு எச்சரிக்கை: கரோனா பாதிப்பு விகிதம் அதிகரிப்பு

பெங்களூரு நகரின் கரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த 7 நாள்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
பெங்களூரு கரோனா பாதிப்பு விகிதம் அதிகரிப்பு
பெங்களூரு கரோனா பாதிப்பு விகிதம் அதிகரிப்பு

பெங்களூரு நகரின் கரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த 7 நாள்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று புதியவகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,892 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மாநிலங்கள் கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்தவகையில் கர்நாடகத்திலும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அதிக அளவாக பெங்களூர் நகர்புறங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அங்கு கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

நாட்டின் 15 முக்கிய நகரங்களில் பெங்களூருவும் ஒன்றாக உள்ளது. இங்கு கடந்த 7 நாள்களில் மட்டும் 4,664 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகத்தில் 1,290 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com