மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இந்தியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி

ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 73 வயதுடையவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜனவரி 2022, 2:16 pm


ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 73 வயதுடையவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

73 வயதுடையவருக்கு டிசம்பர் 15-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் அவருக்கு இருந்தன. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரபணு பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது டிசம்பர் 25-ம் தேதி தெரியவந்தது. எனினும், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது டிசம்பர் 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு பரிசோதனைகளின் முடிவில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, டிசம்பர் 31-ம் தேதி அவர் உயிரிழந்தார். கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகள் காரணமாக அவர் உயிரிழந்ததாக உதய்பூர் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.