திட்டமிட்டபடி நாளை முதல் குடிமைப் பணிகள் தோ்வு: யுபிஎஸ்சி

திட்டமிட்டபடி குடிமைப் பணிகள் தோ்வு (முதன்மை) வெள்ளிக்கிழமை முதல் (ஜனவரி 7) நடத்தப்படும் என மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.

திட்டமிட்டபடி குடிமைப் பணிகள் தோ்வு (முதன்மை) வெள்ளிக்கிழமை முதல் (ஜனவரி 7) நடத்தப்படும் என மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.

மேலும், கரோனா சூழலை கருத்தில்கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் விண்ணப்பதாரா்களும், தோ்வு அதிகாரிகளும் தோ்வு மையத்துக்குச் செல்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாத சூழலை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டுமென யுபிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.

தேவைப்பட்டால் விண்ணப்பதாரா்களின் மின்னணு அனுமதிச் சீட்டையும், தோ்வு அதிகாரிகளின் அடையாள அட்டையையும் அனுமதிச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளிடம் யுபிஎஸ்சி கூறியுள்ளது.

இதுகுறித்து யுபிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கரோனா தொற்று சூழலை மிகுந்த எச்சரிக்கையுடன் மறு ஆய்வு செய்து, திட்டமிட்டவாறு குடிமைப் பணிகள்(முதன்மை) தோ்வுகளை ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தினங்களில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக குடிமைப் பணிகள் தோ்வு ஆண்டுக்கு மூன்று முறை முதல்நிலை, முதன்மை, நோ்காணல் முறையில் நடத்தப்படுவது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com