வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை அதிகரிப்பு
வேட்பாளர்களுக்கான நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் செலவுத் தொகையை மத்திய சட்ட அமைச்சகம் அதிகரித்துள்ளது.


வேட்பாளர்களுக்கான நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் செலவுத் தொகையை மத்திய சட்ட அமைச்சகம் அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணையத்துடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த செலவுத் தொகை உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகை உச்ச வரம்பு ரூ. 70 லட்சத்திலிருந்து ரூ. 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ரூ. 54 லட்சமாக இருந்த உச்ச வரம்பு ரூ. 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகை உச்ச வரம்பு ரூ. 28 லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் உச்ச வரம்பானது ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 28 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...