மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சக அலுவலகத்தில் 20 பணியாளர்களுக்கு கரோனா

மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சக அலுவலகத்தில் 20 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 ஜனவரி 2022, 10:31 am

DIN

மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சக அலுவலகத்தில் 20 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இத்தகவலை அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை பொறுத்தவரை நேற்று 67,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 20,181 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்களில் 1,170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,53,809ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு நேற்று மேலும் 4 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிகை 16,388ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் கரோனவிலிருந்து 2,837 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,55,563ஆக உயந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 35,594 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.