ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தில்லியில் இன்று 20 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியாகலாம்: சுகாதாரத் துறை அமைச்சர்

தில்லியில் இன்று (சனிக்கிழமை) 20,000 கரோனா பாதிப்புகள் பதிவாகலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :8 ஜனவரி 2022, 7:32 am

DIN


தில்லியில் இன்று (சனிக்கிழமை) 20,000 கரோனா பாதிப்புகள் பதிவாகலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று வருகைக்குப் பிறகு தில்லியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, அங்கு வாரஇறுதி மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டுமொரு பொதுமுடக்கம் வந்தால், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவோம் என புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தினக் கூலிகள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், தில்லி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 20 ஆயிரத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

"மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்த முறை குறைவாக உள்ளது. நோய்த் தொற்றின் வீரியமும் குறைவாக இருக்கிறது. 

தில்லியில் சனிக்கிழமை 20 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகலாம். தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் சுமார் 19 சதவிகிதம் இருக்கும். தில்லியில் இதுவரை ஒமைக்ரான் தொடர்பான உயிரிழப்பு பதிவாகவில்லை. வெள்ளிக்கிழமை உயிரிழந்த 9 பேரில் நிறைய பேருக்கு இணை நோய்கள் இருந்துள்ளன.

முன்பு தினசரி பாதிப்புகள் 17 ஆயிரம் வரை பதிவாகும். 200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படும். ஆனால், இந்த முறை உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளன. மற்ற நோய் சிகிச்சைக்காக மருத்துவமனை வருவோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது." என்றார் அவர்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை 17,335 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 17.73 சதவிகிதம். கடந்தாண்டு மே 8-ம் தேதிக்குப் பிறகு இதுவே ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.