பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிறந்த 5 நாள்களில் மருத்துவமனையில் பெண்குழந்தையை விட்டுச் சென்ற தாய்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து 5 நாள்களில் பெண் குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தாய் தப்பிச்சென்றுவிட்டதால் , அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெண் குழந்தை. - கோப்புப் படம்

Published On :

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து 5 நாள்களில் பெண் குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தாய் தப்பிச்சென்றுவிட்டதால் , அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், மாறாக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த 36 வயது பெண்ணுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனா். இவரது கணவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் 3-ஆவதாக கா்ப்பமான அந்த பெண், பிரசவத்திற்காக கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கடந்த 20-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் பிரசவ வாா்டில் தங்கி அவா் சிகிச்சை பெற்று வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை வாா்டில் குழந்தை மட்டுமே அழுது கொண்டிருந்தது. இதை பாா்த்து அதிா்ச்சி அடைந்த ஊழியா்கள், அந்த பெண்ணை வாா்டு முழுவதும் தேடி பாா்த்தும்

கிடைக்கவில்லை. பின்னா், இதுபற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். அதில், குழந்தையை விட்டு விட்டு தாய் தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த பெண்ணை தேடி வருகின்றனா். குழந்தை, மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.