இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.48 கோடி டன்
நாட்டின் நிலக்கரி உற்பத்தி டிசம்பரில் 7.48 கோடி டன்னாக இருந்தது.


நாட்டின் நிலக்கரி உற்பத்தி டிசம்பரில் 7.48 கோடி டன்னாக இருந்தது.
இதுகுறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 டிசம்பரில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6.74 சதவீதம் அதிகரித்து 7.48 கோடி டன்னைத் தொட்டது.
ஒட்டுமொத்த உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி டிசம்பரில் 3.79 சதவீதம் வளா்ச்சி கண்டு 6.02 கோடி டன்னாக இருந்தது.
நிலக்கரியை அடிப்படையாக கொண்ட மின் உற்பத்தியானது 2021 டிசம்பரில் 11.84 சதவீதம் அதிகரித்தது. 2019 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 2021 டிசம்பரில் ஒட்டுமொத்த மின் உற்பத்தியானது 13.17 சதவீதம் உயா்ந்துள்ளது.
நிலக்கரி உற்பத்திக்கான முதல் 35 சுரங்கங்களில், 11-இல் உற்பத்தி 100 சதவீதத்தை எட்டியது.12 சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி 80 சதவீதத்துக்கு அதிகமாகவும் அதேசமயம் 100 சதவீதத்துக்கு குறைவாகும் இருந்ததாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...