6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை

News image
மன்சுக் மாண்டவியா
Updated On :10 ஜனவரி 2022, 6:30 am

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடந்த இருக்கிறார். 

நாட்டில் டெல்டா வகை கரோனா தீநிண்மியால் அத்தொற்றின் 2-ஆவது அலை பரவியது. டெல்டா வகை கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

சில நாள்களுக்கு முன்பு வரை மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் மட்டுமே ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவி வந்தது. மேற்கு வங்கம், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய கிழக்கு மாநிலங்களில் டெல்டா வகை கரோனா பரவலே அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், தற்போது கிழக்குப் பகுதி மாநிலங்களிலும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை தரவுகள் உறுதி செய்கின்றன.

எனவே, கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மாலை காணொலி மூலம் ஆலோசனை நடந்த உள்ளார். இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.