புது தில்லி: நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,033-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்பு 4,033 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான 4,033 ஓமிக்ரான் மாறுபாடுகள்
நாட்டில் ஒமைக்ரானால் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 529 பேர், தில்லி 513 பேர், கர்நாடகம் 441 பேர், கேரளம் 333 பேர், குஜராத் 236 பேர், தமிழ்நாடு 185 பேர், தெலங்கானா 123 பேர், ஹரியானா 123 பேர், உத்தரப்பிரதேசம் 113 பேர், மேற்கு வங்கம் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 1,552 பேர் குணமடைந்துள்ளனர்.
கோவா, மணிப்பூர், சட்டிஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் தொடா்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


