
இந்தியாவில் 3 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கடந்த ஜன.3 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 3 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மேலும், தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | அதிகரிக்கும் கரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.