47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

5 மாநில தேர்தல்: பிரசாரங்களுக்கான தடை ஜன. 22 வரை நீட்டிப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பிரசாரங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கானத் தடை ஜனவரி 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 1:16 pm

DIN


சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பிரசாரங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கானத் தடை ஜனவரி 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 8-ம் தேதி வெளியிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணிகள், நேரடிப் பிரசாரங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை தேர்தல் ஆணையம் தற்போது மேலும் ஒரு வாரங்களுக்கு ஜனவரி 22-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனினும், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. உள்ளரங்கில் நடைபெறும் கூட்டங்களுக்கு அதிகபட்சம் 300 நபர்கள் அல்லது அரங்கின் முழுத் திறனில் 50 சதவிகித அளவிலான நபர்கள் அல்லது மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் நிர்ணயித்துள்ள அளவிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.