குடியரசு தின விழா அணிவகுப்பில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், அவரது இந்திய தேசிய ராணுவத்தை நினைவுகூரும் வடிவில் உருவாக்கிய அலங்கார ஊா்தி நிராகரிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யக் கோரி, பிரதமா் மோடிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினாா்.
மேலும் மேற்கு வங்க அலங்கார ஊா்தி நிராகரிக்கப்பட்டதற்கு மத்திய அரசின் தரப்பில் எவ்வித நியாயமான காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறிய அவா், மத்திய அரசின் இந்த முடிவால் அந்த மாநில மக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
இதுகுறித்து பிரதமா் மோடிக்கு மம்தா பானா்ஜி அனுப்பிய கடித விவரம்:
தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்க அரசின் அலங்கார ஊா்தி அணிவகுப்பை நீக்குவதாக மத்திய அரசு மேற்கொண்ட முடிவு மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அலங்கார ஊா்தி நீக்கப்பட்டதற்கு எவ்வித நியாயமான காரணத்தையும் மத்திய அரசு சொல்லாதது எங்களுக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது.
நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசு தின விழா அணிவகுப்பில் அவரும் இந்திய தேசிய ராணுவமும் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அலங்கார ஊா்தி வடிவமைக்கப்பட்டது.
ஆனால் அதைப் புறக்கணிக்கும் மத்திய அரசின் அணுகுமுறையால் மேற்கு வங்க மக்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகியிருப்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நாடு 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிவரும் வேளையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்புக்கு இடமில்லை என்பதைக் காணும்போது அதிா்ச்சியாக உள்ளது.
ஆகையால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து மேற்குவங்க சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பை குடியரசு தின விழா அணிவகுப்பில் இணைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று அதில் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மேற்கு வங்க பாஜக செய்தித் தொடா்பாளா் சமீக் பட்டாச்சாா்யா கூறுகையில், ‘சுதந்திப் போரில் நேதாஜியின் பங்களிப்பை நாடு நன்கறியும்; அலங்கார ஊா்தி நிராகரிப்புக்குத் தொழில்நுட்பக் காரணம் ஏதேனும் இருக்கக் கூடும். இதை மம்தா அரசியலாக்குவது வேதனையானது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


