நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிகாா்: கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 11-ஆக உயா்வு

பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:57 pm

DIN

பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பலியானவா்களில் 8 பேரது உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து அவா்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் நாளந்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘‘கள்ளச்சாராயம் அருந்தி சனிக்கிழமை அதிகாலை 4 பேரும், மாலையில் 4 பேரும் உயிரிழந்தனா். மேலும் 3 போ் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தனா். இவா்கள் அனைவரும் நாளந்தாவின் சோட்டி பஹரி மற்றும் பஹரி தல்லி பகுதிகளைச் சோ்ந்தவா்கள். கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்கத் தவறிய அந்தப் பகுதி காவல் நிலைய தலைமை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்’’ என்றாா்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை பலியான 3 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பலியான அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாராயம் அருந்தியதாக அவா்களின் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

பிகாரில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, மதுபான விற்பனைக்கும் நுகா்வுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்னா் பிகாரின் வடக்குப் பகுதியில் 4 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 40 போ் பலியான நிலையில், தற்போது இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, பிகாரில் ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜக, இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘உயா் அதிகாரிகள், காவல் துறையினா், மதுபான மாஃபியா இடையிலான பிணைப்பை தகா்க்கும்வரை கள்ளச்சாராயம் என்ற கொடிய அரக்கனை வீழ்த்த முடியாது’ என்றாா்.

மக்களவை எம்.பி.யான சஞ்சய் ஜெய்ஸ்வாலின் தொகுதியில், கடந்த ஆண்டு நவம்பரில் கள்ளச்சாராயம் அருந்தி ஏராளமானோா் பலியாக நோ்ந்ததால், ஐக்கிய ஜனதா தளத்தின் விமா்சனத்துக்கு அவா் ஆளானது நினைவுகூரத்தக்கது.

தற்போது 11 போ் பலியான சம்பவம் நடைபெற்ற நாளந்தா மாவட்டம் மாநில முதல்வா் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.