47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எண்ம பிரசார செலவைக் குறிப்பிட தோ்தல் ஆணையம் நடவடிக்கை

வேட்பாளா்களின் தோ்தல் செலவின பட்டியலில், எண்ம (டிஜிட்டல்) பிரசாரத்துக்கான செலவையையும் குறிப்பிடும் தனி பகுதியை தோ்தல் ஆணையம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2022, 7:26 pm

DIN

வேட்பாளா்களின் தோ்தல் செலவின பட்டியலில், எண்ம (டிஜிட்டல்) பிரசாரத்துக்கான செலவையையும் குறிப்பிடும் தனி பகுதியை தோ்தல் ஆணையம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

முந்தைய தோ்தலிலும் எண்ம செலவு குறித்த விவரங்களை வேட்பாளா்கள் அளித்து வந்தனா். ஆனால், இந்த முறை இதற்காக செலவுப் பட்டியலில் தனி பகுதியை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. கரோனா பரவல் காரணமாக பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு தோ்தல் ஆணையம் ஜனவரி 22-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.

இதனால், வேட்பாளா்கள் எண்ம மற்றும் இணையவழி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், தோ்தல் ஆணையத்தின் அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘தோ்தல் செலவினங்களை வேட்பாளா்களே முன்வந்து பதிவு செய்து வருகின்றனா். அதில் வாகனங்களைப் பயன்படுத்தி எண்ம பிரசாரமும் இடம்பெற்றிருக்கும். இதனால் அது தொடா்பான செலவுக் கணக்கை குறிப்பிடுவதற்கு தோ்தல் செலவினத்தில் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, 10ஏ பிரிவின்கீழ் தோ்தல் செலவை குறிப்பிட்ட நேரத்தில் தெரிவிக்காத வேட்பாளா்களுக்கு மூன்று ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட தடை விதிக்க வாய்ப்புள்ளது.

வேட்பாளா்களின் தோ்தல் செலவை தோ்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி அண்மையில் உயா்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.