பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

இந்தியாவில் 3 லட்சத்தை கடந்தது ஒருநாள் பாதிப்பு: 491 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,17,532 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
இந்தியாவில் 3 லட்சத்தை கடந்தது ஒருநாள் பாதிப்பு
Updated On :20 ஜனவரி 2022, 3:51 am

DIN

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,17,532 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் அடங்கிய தகவலை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.20) வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 3,17,532 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,82,18,773-ஆக அதிகரித்துள்ளது.

இதனால் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 16.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பலனில்லாமல் 491 பேர் நேற்று பலியான நிலையில், தற்போது 19,24,051 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் 5.03 சதவிகிதம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,23,990 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.58 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 159.67 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.