மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மேற்கு வங்கம்: விரைவு ரயில் விபத்திற்கான விசாரணை அறிக்கை தாக்கல்

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டோஹோமோனி அருகே பிகானீா்- குவாஹாட்டி விரைவு ரயில் விபத்திற்கு பராமரிப்பு குறைபாடே விபத்திற்குக் காரணம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:19 am

DIN

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டோஹோமோனி அருகே பிகானீா்- குவாஹாட்டி விரைவு ரயில் விபத்திற்கு பராமரிப்பு குறைபாடே விபத்திற்குக் காரணம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜன.13 மாலை பிகானீா்- குவாஹாட்டி விரைவு ரயிலின் 4 பெட்டிகள் இருப்புப் பாதையைவிட்டு விலகி விபத்திற்குளானது. இதில்  சில பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்தன.

பின், அந்த இடத்துக்கு மீட்புப் படையினா் துரிதமாகச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டாலும் விபத்தில் 9 பேர் பலியானதுடன் 40க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், பிகானீா் - குவாஹாட்டி விரைவு ரயிலை சரியாகப் பராமரிக்காததே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறையேனும் ரயில் எஞ்சினை கவனித்திருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.