புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கர்நாடகத்தைத் தொடர்ந்து தில்லியிலும் நல்ல முன்னேற்றம்: விரைவில் தளர்வுகள்?

கர்நாடக மாநிலத்தைத் தொடர்ந்து புது தில்லியிலும் புதிய கரோனா பாதிப்பு குறைந்திருப்பதையடுத்து, சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News image

கர்நாடகத்தைத் தொடர்ந்து தில்லியிலும் நல்ல முன்னேற்றம்: விரைவில் தளர்வுகள்?

Updated On :21 ஜனவரி 2022, 11:05 am

IANS


புது தில்லி: கர்நாடக மாநிலத்தைத் தொடர்ந்து புது தில்லியிலும் புதிய கரோனா பாதிப்பு குறைந்திருப்பதையடுத்து, சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு, எண் இலக்கத்தின் அடிப்படையில் கடைகளைத் திறக்கும் உத்தரவு போன்றவை நீக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு புதிய கரோனா பாதிப்பு 17,335 ஆகப் பதிவான நிலையில், ஜனவரி 7 முதல் தேசியத் தலைநகர் தில்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.