

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
98 வயதான அவரை கவனித்துக்கொண்ட செவிலியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருக்கும் சோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அவரது மகன் அருண்குமார் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2006-2011 வரை முதல்வராகவும், 2011-2016 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.