ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கணவரின் தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த பெண்

குடும்பச் சண்டையில், கணவரின் தலையை வெட்டிக் கொலை செய்த மனைவி, தலையுடன் ரேணிகுண்டா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

News image
கணவரின் தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த பெண்
Updated On :21 ஜனவரி 2022, 11:09 am

DIN


திருப்பதி: குடும்பச் சண்டையில், கணவரின் தலையை வெட்டிக் கொலை செய்த மனைவி, தலையுடன் ரேணிகுண்டா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டா காவல்நிலைய ஆய்வாளர் அஞ்சு யாதவ் இது குறித்துக் கூறுகையில், ரவி சந்திரன் (53), வசுந்தரா (50) தம்பதி ரேணிகுண்டாவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார். தம்பதிக்கு இடையே அவ்வப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று அவர்களது மகன் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வழக்கம் போல, வியாழக்கிழமையும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நேரிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வசுந்தரா, கத்தியால் கணவரின் கழுத்தை வெட்டியுள்ளார். பிறகு தலையை துண்டாக்கி, ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக் கொண்டு ரேணிகுண்டா காவல்நிலையம் நோக்கிச் சென்றுள்ளார்.

கணவரின் தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.