மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் இரு லஷ்கா் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா் -ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த இருவா் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Updated On :22 ஜனவரி 2022, 8:15 pm

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா் -ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த இருவா் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

தெற்கு காஷ்மீரின் கில்பல் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து பாதுகாப்புப் படை வீரா்கள் எதிா்த் தாக்குதலில் ஈடுபட்டனா். அவா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கா்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பாக செயல்பட்டு வரும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த இருவா் கொல்லப்பட்டனா். அவா்களிடம் இருந்த ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.