மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரோனா பரவல்: 9 மாநில சுகாதாரத் துறையுடன் ஜன.25-ல் ஆலோசனை

கரோனா பரவல் குறித்து 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஜனவரி 25 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

News image

மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)

Updated On :24 ஜனவரி 2022, 12:42 pm

கரோனா பரவல் குறித்து 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (ஜனவரி 25) ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், தில்லி, லடாக், உத்தரப் பிரதேசம், சண்டிகர் ஆகிய 9 மாநில சுகாதாரத் துறையுடன் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கரோனா 3வது அலை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றும் பரவி வருகிறது. இதனைத் தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் நாளை (ஜன.25) 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். 

இதில், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், தில்லி, லடாக், உத்தரப் பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.