உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன.
இந்நிலையில், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் 30 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இதில், கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், பூபேஷ் பாஹேல், சச்சின் பைலட் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்!

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் வேலை: 10, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக நிர்வாகிகள் மனு!

தவெக தேர்தல் பிரசாரப் பாடல் இன்று மாலை வெளியீடு!
வீடியோக்கள்

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

