மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாட்டில் புதிய கரோனா பாதிப்பு 4-வது நாளாகக் குறைந்தது

நாட்டில் இன்று நான்காவது நாளான புதிய கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 2.55 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

நாட்டில் புதிய கரோனா பாதிப்பு 4-வது நாளாகக் குறைந்தது

Updated On :25 ஜனவரி 2022, 3:48 am


புது தில்லி: நாட்டில் இன்று நான்காவது நாளான புதிய கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 2.55 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று புதிய கரோனா பாதிப்பு 3,06,064 ஆக இருந்த நிலையில், இன்று அதை விட 50 ஆயிரம் அளவுக்குக் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து நான்காவது நாளாகக் குறைந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 614 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து ஒரே நாளில் 2.67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 162.92 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 22,36,842  ஆக உள்ளது. கரோனா சோதனை செய்பவர்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 15.52 சதவீதமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.