மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரயில் தீ வைப்பு சம்பவம்: மாணவர்களுக்கு ரயில்வே அமைச்சர் வேண்டுகோள்

மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
அஸ்வினி வைஷ்ணவ்
Updated On :26 ஜனவரி 2022, 10:38 am

DIN

மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைக்கேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி பிகார் மாநிலம் கயாவில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பயணிகள் ரயிலின் பெட்டிகளுக்கு தேர்வர்கள் தீ வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர் வெளியிட்ட செய்தியில்,

மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

அனைத்து ரயில்வே பணியாளர் தேர்வு வாரிய தலைவர்களும் மாணவர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து, குழுவிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக் குழு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.