ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மும்பை அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் பலி எண்ணிக்கை 9 ஆனது

மும்பை அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2022, 2:53 pm

DIN

மும்பை அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

மத்​திய மும்பை​யின் கமாலியா பகு​தி​யில் அமைந்துள்ள ‘சச்​சி​னம் ஹைட்ஸ்’ என்ற 20 மாடி​களைக் கொண்ட உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில் சனிக்​கி​ழமை காலை 7 மணி​ய​ள​வில் தீவி​பத்து ஏற்​பட்​டது. தீ வி​பத்து ஏற்​பட்ட சம​யத்​தில் பல குடி​யி​ருப்​பு​வா​சிகள் தூக்​கத்​தில் இருந்​துள்​ள​னா்.

தக​வ​ல​றிந்து சம்​பவ இடத்​துக்கு வந்த தீய​ணைப்பு வீரா்​கள், பல குடி​யி​ருப்​பு​வா​சி​களை பத்​தி​ர​மாக மீட்ட​னா். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்​து​வ​மனை​களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

21 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் 5 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.