மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேரளம்: கரோனா பாதித்த 94% பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு -அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளத்தில் கரோனா தொற்று பாதித்த 94 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

News image

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

Updated On :28 ஜனவரி 2022, 4:45 am

திருவனந்தபுரம்: கேரளத்தில் கரோனா தொற்று பாதித்த 94 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "கரோனா தொற்று பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளில் 94  சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 சதவிகிதம் பேருக்கு டெல்டா தொற்று பாதிப்பு உள்ளது." 

பிற இடங்களில் இருந்து கேரளம் வந்து தொற்று பாதித்தவர்களில் 80 சதவிகிதம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். மீதமுள்ள 20 சதவிகிதம் பேர் டெல்டா வகை தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். 

மேலும் கரோனா பாதித்தவர்களில் 3.6 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், அவர்களில் 0.7 சதவிகிதம் பேருக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்படுவதாகவும் மற்றும் 0.6 சதவிதம் பேருக்கு ஐசியூ தேவைப்படுகிறது," கேரளத்தில் மூன்றாவது அலை ஒமைக்ரான் அலை என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

கேரளத்தில் நேற்று புதிதாக மேலும் 51,739 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 58.26 லட்சமாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.