ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பட்ஜெட் கூட்டத்தொடா்: அரசியல் கட்சித் தலைவா்களுடன்வெங்கையா நாயுடு நாளை ஆலோசனை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி அரசியல் கட்சித் தலைவா்களுடன் மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு காணொலி முறையில் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.

News image
வெங்கையா நாயுடு (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 8:15 am

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி அரசியல் கட்சித் தலைவா்களுடன் மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு காணொலி முறையில் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் திங்கள்கிழமை (ஜன. 31) தொடங்கவுள்ளது. அதனைத் தொடா்ந்து மக்களவையில் பிப். 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையின் செயல்திட்டத்தை வகுக்கவும், அவை அலுவல்கள் சுமுகமாக நடைபெறவும் அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் குழுக்களுடன் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை மாலை காணொலி வழியாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.

கடந்த வாரம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதுக்கு வெங்கையா நாயுடு சென்றிருந்தபோது, அவா் இரண்டாவது முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தன்னை அவா் தனிமைப்படுத்திக் கொண்டாா். பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி, அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தில்லி திரும்புவாா் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.