காந்தி நினைவு நாள்: ராகுல் மரியாதை
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தில்லியில் அவரது நினைவிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மரியாதை செலுத்தினார்.


மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தில்லியில் அவரது நினைவிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லி ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
இதன் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் கூற்றையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார்.
இதையும் படிக்க | காந்தி நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் மரியாதை
ராகுல் ட்வீட்:
"வரலாற்றில் உண்மையும் அன்பும் நிறைந்த பாதை மட்டுமே வெற்றி பெற்றுள்ளதை நான் விரக்தியடையும்போது நினைவில் கொள்வேன். கொடுங்கோலர்களும், கொலைகாரர்களும் இருந்திருக்கிறார்கள். சில காலங்களுக்கு அவர்கள் வலிமையானவர்களாகத் தெரியலாம். ஆனால், இறுதியில் எப்போதுமே அவர்கள் வீழ்ந்துவிடுவார்கள். அதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...