ஹிமாச்சல் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஹிமாச்சல் மாநிலம் குலு மாவட்டத்திலிருந்து சைஞ் பகுதிக்கு சென்ற தனியார் பேருந்து இன்று காலை 8 மணியளவில் நியோலி-ஷான்சர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சோல்ஜர் பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பள்ளி குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் சிக்கிய சிலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகுர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஹிமாச்சலில் பேருந்து விபத்து: பள்ளிக் குழந்தைகள் உள்பட 16 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.