தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

வெளிநாட்டு நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பிரதமர்: ராகுல் குற்றச்சாட்டு

சொந்த நாட்டு இளைஞர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

News image
ராகுல் காந்தி
Updated On :4 ஜூலை 2022, 7:58 am

DIN

சொந்த நாட்டு இளைஞர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய துணை ராணுவப் படை காவலர் தேர்வெழுதிய இளைஞர்களுக்கு இன்னும் பணி நியமனக் கடிதம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி இளைஞர்கள் போராடும் கணொலியை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்த காணொலியை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி கூறியதாவது:

“வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களின் எதிர்காலத்தைக் கூட பாதுகாக்கும் பிரதமர், சொந்த நாட்டு இளைஞர்களுக்கு வேலையில்லாமல் ஆக்கியுள்ளார். இந்த இளைஞர்களிடம் ஏன் இவ்வளவு பாகுபாடு?” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.