நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியத் தூதரகத்தில் காவலாளி தற்கொலை

காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் காவலாளி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2022, 12:46 pm

DIN

காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் காவலாளி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்டை சார்ந்த காவலாளி இந்தியத் தூதரக வளாகத்தினுள் ஞாயிற்றுக்  கிழமை இரவு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இது திங்கட்கிழமை காலையில்தான் இந்தியத் தூதரகத்திற்கு தெரியவந்துள்ளது. 

“தற்கொலை தகவல் கிடைத்த உடனே நாங்கள் நேபால் காவல் துறையினரிடம் தெரிவித்தோம்” என தூதரக அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

இறந்த நபர் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டு வந்திருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான விசாரணை நடைப்பெற்று வருகிறது. 

ஏற்கனவே 2005ஆம் ஆண்டு சிஐஎஸஃப் வீரர்கள் இந்தியத் தூதரக வளாகத்தினில் சுட்டுக் கொண்டனர். அதில் ஒருவர் இறந்து விட்டார். இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.