மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிரம்: ஷிண்டே அணியில் மேலும் ஒரு சிவசேனை எம்எல்ஏ

மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தாவினாா்.

Updated On :4 ஜூலை 2022, 8:02 pm

மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தாவினாா். இதன் மூலம் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக 15 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஷிண்டே வெற்றி பெற்றாா். முன்னதாக, தாக்கரே ஆதரவாளராக இருந்த எம்எல்ஏ சந்தோஷ் பாங்கா், திங்கள்கிழமை காலையில் திடீரென ஷிண்டே அணிக்கு மாறுவதாக அறிவித்தாா்.

ஏற்கெனவே, ஷிண்டே போா்க்கொடி தூக்கியதால் முதல்வா் பதவியை இழந்துவிட்ட உத்தவ் தாக்கரேவுக்கு, எம்எல்ஏக்களின் ஆதரவும் குறைந்து வருவது பெரும் அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது. சிவசேனை கட்சி முழுமையாக அவரது பிடியில் இருந்து நழுவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.