ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோருவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று காலை பாட்னா வந்துள்ளார்.
அவர் சிறப்பு விமானத்தில் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் காலை 11.13 மணிக்கு வந்திறங்கினார்.
முர்மு மாநில பாஜக அலுவலகத்திற்குச் செல்கிறார், மேலும் சுற்றுப்பயணத்தின் போது முதல்வர் நிதிஷ்குமாரையும் அவர் சந்திக்கிறார்.
பின்னர், காந்தி மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு உணவு விடுதிக்குச் செல்கின்றார். அங்கு அவர் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்பட அனைத்து தேசிய ஜனநாயக் கூட்டணி தொகுதிகளின் மூத்த தலைவர்களை சந்தித்து தேர்தலில் ஆதரவைக் கோருவார் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
மேலும், இன்று பிற்பகல் பாட்னாவிலிருந்து புறப்பட்டு கௌகாத்தி வழியாக அகர்தலாவை அடைய அவர் திட்டமிட்டுள்ளார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

