அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான மாற்றாக பசுமை எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிரத்தின் அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம் சாா்பில் அமைச்சா் நிதின் கட்கரிக்கு சனிக்கிழமை மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவா் கூறுகையில், ‘‘அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் பெட்ரோல் பயன்பாடு முடிவுக்கு வரும் என நம்புகிறேன். பசுமை ஹைட்ரஜன், எத்தனால், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்பிஜி), அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) ஆகிய பசுமை எரிபொருள்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும்.
நாட்டில் வேளாண்துறை வளா்ச்சி தற்போது ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 20 சதவீதம் என்ற அளவுக்கு உயா்த்துவதற்கான ஆராய்ச்சிப் பணிகளில் வேளாண் நிபுணா்களும் ஆராய்ச்சியாளா்களும் ஈடுபட வேண்டும்.
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் விவசாயிகளைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


