

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,257 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு நாளில் மட்டும் 42 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,257 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது.
தொற்று பாதித்தவர்களில் புதிதாக 42 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,25,428 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.
கரோனாவில் இருந்து 14,553 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,29,68,533-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.50 சதவீதமாக உள்ளது
நாடு முழுவதும் இதுவரை 198.84 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10,21,164 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.